காரிமங்கலம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் கைது

காரிமங்கலம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-13 19:05 GMT
காரிமங்கலம்:
காரிமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது காரிமங்கலம் பஸ் நிலையம், ராமசாமி கோவில், அடிலம், சப்பாணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சிவகுமார் (வயது45), கிருஷ்ணன் (37), அரவிந்த்பிரசாத் (27), சின்னபையன் (55), ஆறுமுகம் (47) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்