கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி

நில அளவை செய்து பட்டா வழங்குவது குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-05-13 19:05 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, அம்மூர் கிராமத்தில், வாலாஜா தாலுகாவை சேர்ந்த 32 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, உட்பிரிவு பட்டா நிலஅளவை செய்வது குறித்து  நில அளவையாளர்களால், பயிற்சி வழங்கப்படுகிறது. இதை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உட்பிரிவு பட்டா மாற்றம் மனுக்கள் அதிகளவில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த பணியை மேற்கொள்ள நில அளவையர்கள் குறைவாக உள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களின் உட்பிரிவு பட்டா மாற்றம் மனுக்கள், அதிக அளவில் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, உட்பிரிவு பட்டா, நில அளவை செய்து பட்டா வழங்கிட பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி ஒரு வார காலம் நடைபெறுகிறது.

பயிற்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் முழுமையாக சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.  பொதுமக்களிடத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தான் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு அளந்து பட்டா வழங்கிடும் போது எவ்விதம் பிரச்சினையும் ஏற்படக்கூடாது. 
இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் வரைபடத்தை பார்த்து இடத்தின் நிலை, அளப்பது குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார். வாலாஜா தாசில்தார் ஆனந்தன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்