ஆட்டோ கவிழ்ந்து விபத்து
கண்ணமங்கலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆரணி
கண்ணமங்கலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கண்ணமங்கலத்தை அடுத்த கேளுர் மதுரா சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சதானந்தம் (வயது 36), தையல் தொழிலாளி. இவர், 4-ந்தேதி வாழியூரில் உள்ள தனது மாமா வீட்டுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். கன்னி கோவில் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து ஓடிய ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் படுகாயம் அடைந்த சதானந்தனை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து சதானந்தத்தின் மனைவி மேகலா கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகிறார். விசாரணைக்காக ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.