போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளைக்கு மண் கடத்திய லாரி பறிமுதல்

போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளைக்கு மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-05-13 19:04 GMT
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கல்லாவி சாலை, தனியார் பெட்ரோல் நிலையம் அருகே கனிமவளத்துறை அலுவலர் பொன்னுமணி மற்றும் அலுவலர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்திய போது டிரைவர் மற்றும் உடன் வந்தவர்கள் கீழே இறங்கி தப்பியோடி விட்டனர். இதையடுத்து அலுவலர்கள் லாரியில் சோதனை செய்ததில் செங்கல் சூளைக்கு மண் கடத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது  மடத்தானூரை சேர்ந்த லாரியின் உரிமையாளர் கவுரன், அதே பகுதியை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் என்பது தெரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி போலீசார் விரைந்து சென்று மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி உரிமையாளர் கவுரன், டிரைவர் வெங்கடேசன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்