ஓசூரில் பெண்ணிடம் பணம் அபேஸ் செய்த 3 பெண்கள் கைது
ஓசூரில் பெண்ணிடம் பணம் அபேஸ் செய்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்:
ஓசூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 32). இவர் வக்கீல் அலுவலகம் ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 12-ந் தேதி இவர், ஓசூர் -பாகலூர் சாலையில் ஜி.ஆர்.டி. பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பெண்கள் உமா மகேஸ்வரி வைத்திருந்த பையில் இருந்த ரூ.3,100 ஐ அபேஸ் செய்து கொண்டு தப்பி ஓட முயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உமாமகேஸ்வரி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த 3 பெண்களையும் பிடித்து ஓசூர் அட்கோ போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் தாலுகாவை சேர்ந்த ஜோதி (30), மற்றொரு ஜோதி (32) மற்றும் சபீனா (25) என தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.