கிருஷ்ணகிரியில் மொபட் மீது லாரி மோதி கட்டிட தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரியில் மொபட் மீது லாரி மோதி கட்டிட தொழிலாளி இறந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 41). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 11-ந் தேதி இரவு மொபட்டில் கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் கிட்டம்பட்டி பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.