திருநேத்திரநாதர் கோவில் குடமுழுக்கு

திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது.

Update: 2022-05-13 19:00 GMT
நன்னிலம்:
நன்னிலம் அருகே திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 8-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.  அதனைத் தொடர்ந்து  யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை கடங்கள் புறப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞானமகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை நடந்தது. இதற்கான  ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவிதா செய்திருந்தார்.

மேலும் செய்திகள்