தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-05-13 18:50 GMT
மின்கம்பம் சீரமைக்கப்பட்டது
கொட்டாரம் அருகே வைகுண்டப்பதியில் மருந்துவாழ்மலை செல்லும் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த ஒரு மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாய நிலையில் காணப்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 
சேதமடைந்த சாலை
கருங்கல்-எட்டணி சாலையில் இருந்து மூசாரி, பாலூர் செல்லும் இணைப்புச் சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   -ஜெஸ்பின், சிராயன்குழி.
சீரான குடிநீர் தேவை
வெள்ளிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிக்கரை கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலய தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள பொது குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சீராக குடிநீர் வருவதில்லை. இதனால், அந்த தெருவாசிகள் தினமும் குடிநீருக்காக அடுத்த தெருக்களுக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாயில் அடைப்பை சீரமைத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                     -ரோசம்மாள், பள்ளிக்கரை. 
நாய்கள் தொல்லை
சுசீந்திரம் பேரூராட்சிக்கு  உட்பட்ட 1-வது, 2-வது, 3-வது வார்டுகளில் உள்ள தெருக்களில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக வாகனங்களிலும், நடந்தும் செல்வோரை விரட்டுவதும், கடிக்கவும் முயற்சிக்கிறது. இதனால், பெண்கள், குழந்தைகள் பெரும் அச்சத்துடனேயே கடந்து செல்கிறார்கள். எனவே, நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                     -கே.சரவணகுமார், சுசீந்திரம்.
சாலை சீரமைக்கப்படுமா?
சூழால் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலுவிளையில் இருந்து  பாலவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                             -ஜெபின், ஆலுவிளை.
ஆபத்தான மின்கம்பம்
கருங்கலில் இருந்து பெருமாங்குழி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் துண்டத்துவிளை கிறிஸ்வ ஆலயம் அருகில் அமைந்துள்ள மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுவிட்ச் பெட்டி மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் சிறுவர்கள், மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உயிரிழப்பு ஏற்படுவதற்க்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுவிட்சு பெட்டியை கம்பத்தில் உயரமான இடத்தில் பொருத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                   -எஸ்.சுனில்குமார், கருங்கல்.

மேலும் செய்திகள்