12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 12 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 12 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம்செய்து கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
கந்திலி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.சித்ரகலா நாட்டறம்பள்ளிக்கும், ஏ.எஸ்.அப்துல்கலீல் மாதனூருக்கும்,அங்கு பணிபுரியும் ஆர்.துரை கந்திலிக்கும், ஜெ.மணவாளன் திருப்பத்தூருக்கும், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் பி.முருகேசன், ஜோலார்பேட்டைக்கும், திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன் மாதனூருக்கும், எஸ்.பிரேம்குமார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கண்காணிப்பாளராகவும், அங்கு பணிபுரிந்த என்.சங்கர் திருப்பத்தூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.தினகரன் ஜோலார்பேட்டைக்கும், அங்கு பணிபுரிந்த விநாயகம் ஆலங்காயத்திற்கும், அங்கு பணிபுரிந்த எஸ்.பிரபாவதி கந்திலிக்கும், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.சிவக்குமார் ஆலங்காயத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பணியிட மாறுதல் பெற்றவர்கள் உடனே பணியில் சேர வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.