கர்நாடக மாநில மது பாக்கெட் விற்ற வாலிபர் கைது

ஜோலார்பேட்டையில் கர்நாடக மாநில மது பாக்கெட் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-13 18:16 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புது ஓட்டல் தெருவில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது கர்நாடக மாநில மது பாக்கெட்களை விற்பனை செய்து கொண்டிருந்த புது ஓட்டல் தெருவை சேர்ந்த சேட்டு என்பவரது மகன் ரஞ்சித் (வயது 31) என்பரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்து 32 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்