5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
வாணியம்பாடியை அடுத்த விஜிலாபுரம் கோடியூர் பகுதியில் இருந்து வெளி மாநிலத்திற்கு லாரியில் ரேஷன் அரிசி கடுத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வேலூர் குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரும், வாணியம்பாடி தாலுகா போலீசாரும் இணைந்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பிரபு என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசியை ஒரு லாரியில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ஏற்றிக் கொண்டிருந்தார். போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் அவர்கள் ஆதியூரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 36) மற்றும் சுந்தரம்பள்ளியை சேர்ந்த வேலு (32) என்பது தெரியவந்தது. இருவரையும் அவர்கள் கைது செய்து லாரியுடன் 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் லாரி ஆகியவற்றை வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வேலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் அதிகாரிகள், கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.