காரைக்கால் வக்பு நிர்வாக சபையை மாற்றி அமைக்க வேண்டும்
காரைக்கால் மாவட்ட முஸ்லிம் ஜமாத்தார்கள், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
காரைக்கால் மாவட்ட முஸ்லிம் ஜமாத்தார்கள், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் மாவட்ட வக்பு நிர்வாக சபையின் பதவிக்காலம் முடிந்து 4 ஆண்டுகளாகிறது. ஆனால் இதுவரை வக்பு நிர்வாக சபை மாற்றியமைக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள நிர்வாகிகளுக்கு முறைப்படியான பதவி நீட்டிப்பும் அளிக்கப்படவில்லை. எனவே காரைக்கால் வக்பு நிர்வாக சபையை உடனே மாற்றியமைக்க வேண்டும் அல்லது தனி அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வக்பு வாரியத்தின் சொத்துக்களை மீட்க வேண்டும். ஹஜ் கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.