செங்கோட்டை அருகே அனைத்து துறைகளின் சார்பில் சிறப்பு முகாம்
செங்கோட்டை அருகே அனைத்து துறைகளின் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள இலத்தூரில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமமான இலத்தூர் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் பல்வேறு சிறப்பு பணிகளை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் உத்தரவின் பேரில் அனைத்து துறைகளின் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் கனகம்மாள், இலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தனர். கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் திட்டக்குழு தலைவரும், செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலருமான ஷேக் முகைதீன் வரவேற்று திட்ட விளக்க உரையாற்றினார். கால்நடை பராமரிப்பு துறை சார்பில் டாக்டர் சிவகுமார், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் உதவி பொறியாளர் சுப்பிரமணியம், வேளாண்மை விற்பனை துறையின் சார்பில் வேளாண்மை அலுவலர் முகைதீன் பிச்சை, மண் ஆய்வு பற்றி வேளாண்மை அலுவலர் ராஜேஸ்வரி, உயிர் உர பயன்பாடு பற்றி வேளாண்மை அலுவலர் நபிஸா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
முகாமில் முன்னோடி விவசாயி ரமேஷ் உள்ளிட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி மேலாளர் டாங்கே செய்திருந்தார். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் நன்றி கூறினார்.