பெண்களுக்கான கால்நடை வளர்ப்பு பயிற்சி
பெண்களுக்கான கால்நடை வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தரகம்பட்டி
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தமிழக அரசின் ஏழ்மை ஒழிப்பு திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டிற்கான விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடு மற்றும் செம்மறிஆடு வழங்கதேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு தொழில்முனைவோர்கள் திட்டத்தில் கீழ் முதற்கட்ட தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி இயக்குனர் மோகன் குமார் முன்னிலையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் தினேஷ்குமார், கால்நடை உதவி மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் கால்நடை உதவியாளர்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.