கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு

சட்டநாதபுரம் கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு நடந்தது

Update: 2022-05-13 17:44 GMT
சீர்காழி
 சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ஆகியோர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் நேற்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 3 கால யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர், புனிதநீர் கலசங்கள் மேளதாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்