மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சொத்துவரி உயர்வை ரத்துசெய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-05-13 17:11 GMT
புவனகிரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சதானந்தம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணவாளன், சிவாஜி, லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், செயலாளர் மாதவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். 
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட வரி உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய மற்றும் நகர குழு அருளானந்தம், காளி, கோவிந்தராஜ், மணி, பிரபு, ராஜன், அன்பு, தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்