ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ஆற்காட்டில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இதனை கலெக்டர் பார்வையிட்டார்.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கான ஒருநாள் புத்தாக்க பயிற்சி ஆற்காட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு கடந்த ஆண்டு ரேஷன் கடைகளில் சிறப்பாக பணியாற்றிய 30 விற்பனையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்களை வழங்கி வாழ்த்திப் பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஜயப்பதுரை, கற்பகம் கூட்டுறவு இணைப்பதிவாளர் நந்தகுமார், பொது வினியோக திட்ட துணைப் பதிவாளர் சரவணமூர்த்தி, கூட்டுறவு சார்பதிவாளர் சமுத்திர விஜயன உள்பட பலர் உடனிருந்தனர்.