மாணவர்கள் சேமித்த தொகையில் பள்ளிக்கு நாற்காலி

தொண்டி அருகே மாணவர்கள் சேமித்த தொகையில் பள்ளிக்கு நாற்காலி வழங்கப்பட்டது.

Update: 2022-05-13 17:03 GMT
தொண்டி,

திருவாடானை யூனியன் தொண்டி அருகே உள்ள தாமோதரன் பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளி தலைமையாசிரியர் முத்துசாமி மாணவ-மாணவியரை வாழ்த்தி பாராட்டி பேசினார்.விழாவில் 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் தங்களது வீட்டில் சிறுகச்சிறுக சேமித்து வைத்த சேமிப்புத் தொகையின் மூலம் பள்ளிக்கு ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை நன்கொடையாக வழங்கினர்.விழாவில் பள்ளி உதவி ஆசிரியை சிவசங்கரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர், மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்