புதிய அலுவலக கட்டுமான பணியை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
ராணிப்பேட்டையில் கட்டப்படும் புதிய அலுவலக கட்டுமான பணியை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையை அடுத்த பாரதி நகர் அருகே உள்ள ஐ.வி.பி.எம். பக்கத்தில் ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம், மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுமான பணிகளை நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போலீசார் பலர் உடனிருந்தனர்.