கார் தீப்பிடித்ததில் சிறுவன் காயம்

கார் தீப்பிடித்ததில் சிறுவன் காயமடைந்தான்.

Update: 2022-05-13 16:50 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள கருங்காலிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ்குமார் (வயது 36). இவருடைய மனைவியும், மகன் கில்பர்ட்டும் (5) விழுப்புரத்தில் இருந்து கருங்காலிப்பட்டுக்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். 

காணை பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரம் காரை நிறுத்திய சிறிது நேரத்தில் அந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் சிறுவன் கில்பர்ட் லேசான காயமடைந்தான். உடனே அவனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்