தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான புளியமரம்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இருந்து நொய்யல் செல்லும் தார் சாலையில் கந்தம்பாளையம் அருகே நிழல் தரும் புளிய மரங்கள் உள்ளது. இதில் உள்ள ஒரு புளியமரத்தில் பெரிய துவாரம் ஏற்பட்டு எந்த நேரத்திலும் தார்சாலையில் விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள புளிய மரத்தை அகற்றி விபத்தினை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சக்திவேல், கந்தம்பாளையம், கரூர்.
பயன்பாட்டிற்கு வராத கழிவறை
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் குளிர்ந்தமலை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இப்பகுதியில் புதிய கழிவறை கட்டப்பட்டது. இவை 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மித்திரன்ராதா, வேலாயுதம்பாளையம், கரூர்.