வியாபாரி தற்கொலை

பெரியகுளம் பகுதியில் கடன் தொல்லையால் வியாபாரி விஷம் மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-05-13 16:01 GMT
பெரியகுளம்: 

பெரியகுளம் தென்கரை சுதந்திர வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 67). இவர் தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் தனது மனைவி செல்வியிடம் கூறி புலம்பியதாக தெரிகிறது. இந்நிலையில் விஷ மாத்திரையை தின்று வீட்டில் கணேசன் மயங்கி கிடந்தார்.
இதையடுத்து அவரை மனைவி மற்றும் உறவினர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்