நாளை மின்சாரம் நிறுத்தம்

பெரியகுளம், ஆண்டிப்பட்டி பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-05-13 15:36 GMT
பெரியகுளம்: 

பெரியகுளம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட தாமரைக்குளம், பாரதி நகர் பகுதியில் உயர் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையொட்டி அப்பகுதிகளில் நாளை (சனிக்கிழமை)  காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.  

இதேபோல் ஏத்தக்கோவில் ஆண்டிப்பட்டி பகுதியில் உயர் அழுத்த மின் பாதையில் நாளை  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையொட்டி ராஜகோபாலன்பட்டி, சேடப்பட்டி, சுப்புலாபுரம், பொம்மிநாயக்கன்பட்டி, திம்மரசநாயக்கனூர், ஜக்கம்பட்டி, பாப்பம்மாள்புரம், ஏத்தகோவில், கொத்தப்பட்டி, சித்தையகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இத்தகவலை மின்கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்