கள்ளக்குறிச்சியில் மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
கள்ளக்குறிச்சியில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து அவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
கள்ளக்குறிச்சி,
தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்றுடன் தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை கொண்டாடும் விதமாக கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒருவா் மீது ஒருவா் பேனா மை தெளித்தும், கலர் பொடியை தூவியும், கேக் வெட்டியும் மகிழ்ந்தனர்.