சூளைவாய்க்காலில் 75 பழங்குடியினருக்கு அடையாள அட்டை வழங்கல்
சூளைவாய்க்காலில் 75 பழங்குடியினருக்கு கலெக்டர் செந்தில்ராஜ் அடையாள அட்டை வழங்கினார்.
ஏரல்:
ஏரல் அருகேயுள்ள சூளைவாய்க்கால் கிராமத்தில் கலெக்டரின் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி 75 பழங்குடியினருக்கு அடையாள அட்டை வழங்கினார். பின்னர் பொதுமக்களிடம் அவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பேசினார். இந்த முகாமில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, சூளைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் வேங்கையன், ஏரல் தாசில்தார் கண்ணன், சமூக நல திட்ட தாசில்தார் சங்கரநாராயணன், மண்டல துணை தாசில்தார் பொன்லட்சுமி, துணை தாசில்தார் முரளி, ஸ்ரீவைகுண்டம் திட்ட அலுவலர்கள் சுரேஷ், அண்ட்ரோ, வருவாய் அதிகாரி முத்து சரவணன், கிராம நிர்வாக அதிகாரிகள் புனிதா, முத்துமாலை மற்றும் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.