கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செல்போன்கள்
கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செல்போன்களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி,
சென்னையில் உள்ள கல்லூரிகளில் தங்கி படிக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 5 மாற்றுத்திறனாளி மாணவா்கள், தங்களுக்கு தமிழக அரசின் ஆண்ட்ராய்டு செல்போன் வழங்கக்கோரி கலெக்டா் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதையடுத்து அந்த மனுக்களின்மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 5 ஆண்ட்ராய்டு செல்போன்களை மாணவர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனு மீது பரிசீலனை செய்து உடனுக்குடன் தீர்வு காணவேண்டும் என மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலருக்கு அவர் அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.