கோத்தகிரி
கோத்தகிரி அருகே டானிங்டன் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோவிலில், கடந்த 6-ந் தேதி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் கணபதி வழிபாடு, கன்னிமார், கருப்பராயர் மற்றும் தன்னாசியப்பருக்கு பூஜைகள் நடைபெற்றன. மேலும் பால்குட ஊர்வலம், அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து இன்று கோவிலில் மறு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.