பாலகொலா ஊராட்சியில் சிறப்பு கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்

பாலகொலா ஊராட்சியில் சிறப்பு கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்

Update: 2022-05-13 14:32 GMT
ஊட்டி

மஞ்சூர் அருகே பாலகொலா ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி கவுன்சிலர்கள் சித்ரா, விஜயன், அன்னகொடி, ராஜாராம், தனலட்சுமி, சிவன் பெள்ளன், ராஜேந்திரன், நாகராஜன், அலமேலு, புஷ்பா, சக்தி, சுப்பிரமணி, ராஜேஸ்வரி, மஞ்சை மோகன் ஆகியோர் ஊட்டியில் உள்ள ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். 

அதில், பாலகொலா ஊராட்சி துணைத்தலைவர் ரீட்டா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளோம். அதற்கு சிறப்பு கூட்டம் நடத்த ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் சிறப்பு கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே பாலகொலா ஊராட்சியில் சிறப்பு கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்