கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள குண்டாடா அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முடித்த மாணவர்களை வழியனுப்பும் விழா நடைபெற்றது. ஆங்கில பட்டதாரி ஆசிரியை மல்லிகா குமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை தாங்கி பேசும்போது, மாணவர்கள் தங்ளது மேற்படிப்பை அருகில் உள்ள அரசு பள்ளியில் தொடர வேண்டும். இதன் மூலம் அரசு வழங்கும் இட ஒதுக்கீடுகளை பெற முடியும் என்றார்.
கோத்தகிரி உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவன், ‘இன்ஸ்பையர்’ விருது என்ற அறிவியல் புத்தாக்க விருதுக்கு தேர்வான குண்டாடா அரசு நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி ஸ்ரீதயாவை பாராட்டி கால்குலேட்டர் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். தொடந்து படிப்புடன் விளையாட்டு, ஆங்கிலம், அறிவியல் கண்காட்சி, கலைத்துறை, புத்தாக்க அறிவியல் விருது உள்ளிட்ட அனைத்திலும் சிறந்து விளங்கும் ஸ்ரீதயா, லிபியா, கிர்த்திகா, சுபலட்சுமி ஆகிய மாணவிகளுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்துக்கொண்டனர். முடிவில் தமிழ் ஆசிரியை ரோஸ்லின் ஜெபசெல்வி நன்றி கூறினார்.