தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் குளிர்ச்சியூட்டும் விழா

தொட்டியம்,மே.14-
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு 27-ம் ஆண்டு குளிர்ச்சியூட்டும் விழா நடைபெற்றது. விழாவையொட்டி தொட்டியம் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து வந்து மதுரைகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பால்,தயிர், இளநீர் உள்ளிட்ட 12 வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த மகா தீபாராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.