தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகை மாயம்

சாத்தான்குளம் அருகே தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகை திருடப்பட்டது.;

Update: 2022-05-13 14:14 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 51). தொழிலாளி. இவர் வீட்டிலுள்ள பீரோவில் 5½ பவுன் தங்க நகை வைத்திருந்தாராம். இந்நிலையில் நேற்று காலையில் பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த  நகையை காணவில்லையாம். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சாத்தான்குளம போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தஎபனேசர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகிறார்.

மேலும் செய்திகள்