சங்கராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

சங்கராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-05-13 14:08 GMT
சங்கராபுரம், 

சங்கராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்து. இதில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உட்பிரிவு பட்டா மாற்றம் செய்வதற்கான அளவீடு பயிற்சி மற்றும் களப்பயிற்சி குறித்து சங்கராபுரம் வட்ட துணை ஆய்வாளர்கள் பால்தினகர், மணிவண்ணன், சார் ஆய்வாளர் பிரபாகர் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியை தாசில்தார் பாண்டியன், தலைமையிடத்து துணை தாசில்தார் மாரியாப்பிள்ளை, மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் வரதராசன், முருகன், ராஜா, வினோத், பெரியதமிழன், கலையரசன், ஜெயலட்சுமி, சண்முகப்பிரியா, பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்