சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர், மூக்கனூர் தாண்டுவனேஸ்வரர், மஞ்சபுத்தூர் கைலாசநாதர், வடபொன்பரப்பி சுப்ரீஸ்வரர், ராவத்தநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர், புதுப்பட்டு சொர்ணபுரீஸ்வரர் ஆகிய கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.