அரகண்டநல்லூர் தேரடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

அரகண்டநல்லூர் தேரடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;

Update: 2022-05-13 13:50 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் தேரடி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 11-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, மஹா சாந்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதல் கால பூஜையும்  விஸ்வரூப தரிசனம், 2 மற்றும் 3-ம் காலயாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவில் சாமி வீதிஉலா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர்கள், உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்