சின்னசேலத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி
சின்னசேலத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சின்னசேலம்,
சின்னசேலம் வட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை மேற்கொள்ளும் பயிற்சி தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதற்கு தாசில்தார் அனந்தசயனன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் மனோஜ் முனியன் முன்னிலை வகித்தார்.
வட்ட துணை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், வட்ட சார் ஆய்வாளர் உமா, முதுநிலை வரைவாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, புலத்தில் நில அளவீடுகள் செய்வது, புலப்படம் வரைதல், புலத்தின் உட்பிரிவு எண்கள் வழங்குவது, உட்பிரிவு கோப்புகள் தயார் செய்வது, உடைமையாளர்களின் ஆவணங்களை உறுதிப்படுத்துதல், எல்லைக் கற்களை அடையாளம் காணுதல் போன்றவை குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.