இடிந்து விழும் நிலையில் சாவடி

இடிந்து விழும் நிலையில் சாவடி

Update: 2022-05-13 13:31 GMT
மடத்துக்குளம் தாலுகா துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட பெங்களூர் கிராமத்திலிருந்து சின்னப்பன் புதூர் செல்லும் சாலை விளை நிலங்களுக்கு மத்தியில் உள்ளது. 3 கி.மீ.நீளம் உள்ள இந்த சாலையை விவசாயிகள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். இந்த சாலை பயன்படுகிறது. தற்போது இந்த பாதை மிகவும் பழுதடைந்துள்ளது.இந்த சாலையை சீரமைக்க  வேண்டும்.
சாலையில் ஓடும் கழிவு நீர்
 குமரலிங்கம் சாமுராய்பட்டியில் மழை நீர்வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளிேயறும் கழிவுநீர் தெருவின்நடுவில் ஆறுபோல் பெறுக்கெடுத்து ஓடுகிறது.  அது மட்டுமல்ல இதனால் சுகாதார சீ்ர்கேடு ஏற்பட்டு கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது. எனவே  மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடிந்து விழும் நிலையில் சாவடி
தாராபுரம் 14-வது வார்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பொது சாவடி உள்ளது. இந்த சாவடி அந்த காலத்தில் கட்டப்பட்ட ஓட்டுச்சாவடி ஆகும். தற்போது  அந்த சாவடியின் சுவர்கள் பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சாவடியை இடித்து விட்டு புதிய  கட்டிடம் கட்ட வேண்டும்

மேலும் செய்திகள்