தாராவியில் கத்தி முனையில் பெண் கற்பழிப்பு
தாராவியில் கத்தி முனையில் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார்.
மும்பை,
மும்பை தாராவி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கூறப்பட்டு இருந்ததாவது:-
சம்பவத்தன்று காலை நான் வீட்டில் தனியாக தூங்கி கொண்டு இருந்தேன். எனது மாமனார் நடைபயிற்சிக்கு வெளியே சென்ற போது, கதவை பூட்டாமல் சென்று உள்ளார். இதை பயன்படுத்தி அடையாளம் தெரியாத 2 நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் என்னை துணியால் கட்டிப்போட்டு கத்தி முனையில் மிரட்டி கற்பழித்தனர். மேலும் அவர்கள் இந்த காட்சியை செல்போனில் படம் எடுத்தனர்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த தாராவி போலீசார் சம்பவம் நடந்த வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து பெண்ணை கற்பழித்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.