மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
மடத்துக்குளம்
மடத்துக்குளம் ஒன்றியக் குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. ஒன்றிய குழுத்தலைவர் காவியா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஈஸ்வரசாமி முன்னிலை வகித்தார். இதில்
மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட 11 ஊராட்சிகளில் நடக்கும் கட்டுமான பணிகள், கிராம வளர்ச்சிக்கான புதிய கட்மைப்புத் திட்டங்கள், அனைவருக்கும் தூய்மையான சுகாதாரமான குடிநீர் வழங்குவது, குழாய்கள் இல்லாத இடங்களுக்கு குழாய்கள் அமைத்து குடிநீர் கொண்டுசென்று வினியோகிப்பது, அரசு திட்டங்களை துரிதமாக செயல்படுத்துவது மற்றும் ஒன்றிய அலுவலகத்தின் வரவு செலவுகள் குறித்து கவுன்சிலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தாரா வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் கணேஷ் மாலா, ரொனால்ட் செல்டன் பெர்னாண்டஸ் கிராம ஊராட்சிகள் மற்றும் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.