திமுகஅரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திமுகஅரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Update: 2022-05-13 11:07 GMT
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில், அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள தாஜ் திடலில்  நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க.திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.குடிமங்கலம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பொன்.முருகேசன் வரவேற்று பேசினார். உடுமலை ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.செல்வராஜ், மா.பழனிச்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைக்கழக பேச்சாளர் சோம.செந்தமிழ்செல்வன்,
பொள்ளாச்சி தொகுதி எம்.பி.கு.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பேசினர்.

மேலும் செய்திகள்