அவினாசிலிங்கேசுவரர் கோவில் 2வதுநாள் தேரோட்டம்

அவினாசிலிங்கேசுவரர் கோவில் 2வதுநாள் தேரோட்டம்;

Update: 2022-05-13 11:03 GMT
அவினாசி
அவினாசி லிங்கேசுவரர் கோவில்  2வதுநாள் தேரோட்டம் நடந்தது. பின்னர் மதியம் தேர் நிலை அடைந்தது. தேரை வடம்பிடித்து இழுக்க பக்தர்கள் திரண்டனர். 
அவினாசிலிங்கேசுவரர் கோவில்
அவினாசியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை மாதம் தேரோட்ட திருவிழா கடந்த  5ந் தேதி  கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து ஒவ்ெவாரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில்எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் மகுடம் சூட்டும் நிகழ்ச்சியாக தேேராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. தேரோட்டம் தொடங்கும் முன்பாக சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைநடந்தது. அதை தொடர்ந்து காலை 8.45 மணியளவில் திருத்தேர்வடம்பிடித்து பக்தர்கள் தேர் இழுத்தனர். முற்பகல் 11.30 மணியளவில் அவினாசிமேற்கு ரதவீதியில் தேர் நிறுத்தப்பட்டது.
இரண்டாம் நாள் தேரோட்டம்
பின்னர் நேற்று காலை 9 மணியளவும் ரதத்தின் மீதிருந்த சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் 2வது நாளாக வடம்பிடித்து தேரை இழுத்தனர். ஆரம்பத்தில் பக்தர் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தேர் சிறிது தூரம் நகர்ந்ததும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்துவடம்பிடித்து  தேரை இழுத்தனர். பிற்பகல் 2.20 மணியளவில் திருத்தேர் நிலை வந்துசேர்ந்தது. அப்போது அதிர்வேட்டு முழங்க அனைத்து பக்தர்களும் கைதட்டி மகிழ்த்தியை வெளிப்படுத்தினர்.
இன்று சனிக்கிழமை காலை 8 மணியளவில் அம்மன் தேர் சிறியதேர் வடம்பிடித்து இழுத்து பிற்பகல் 2 மணிக்குள் நிலை சேர்க்கப்பட உள்ளது. 15ந் தேதி இரவுவண்டித்தாரை பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. 16ந் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர்விழாவும் 17 தேதி மகா தரிசனமும் நடக்கிறது. 18ந் தேதி மஞ்சள் நீர் விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்