பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2022-05-13 10:57 GMT
ஓட்டப்பிடாரம்:
பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்
ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டி கட்டபொம்மன் பிறந்த நாள் விழா மற்றும் வீரசக்கதேவி கோவில் 66-வது திருவிழா நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வீரசக்கதேவிக்கு 16 வகையான சிறப்பு பூஜைகள் மட்டும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவை முன்னிட்டு வீரபாண்டி கட்டபொம்மன் கோட்டையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
நினைவு ஜோதி
இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கோவில்பட்டி உதவிகலெக்டர் சங்கரநாராயணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், வீரபாண்டி கட்டபொம்மன் நேரடி வாரிசு வீமராஜா என்ற ஜெகவீர பாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை, பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கமலாதேவி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது கட்டபொம்மன் வாரிசுக்கு மாவட்ட கலெக்டர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருவிழாவிற்கு திருச்செந்தூர், கயத்தாறு, வேம்பார் உட்பட பல இடங்களில் கொண்டுவரப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரை நினைவு ஜோதியை வீரசக்கதேவி ஆலய குழு தலைவர் முருகபூபதி பெற்றுக்கொண்டார். திருவிழாவிற்கு தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் உட்பட பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்தனர்.
வீரசக்கதேவி கோவில்
அப்போது ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம், வீரசக்கதேவி ஆலய குழுத்தலைவர் முருகபூபதி, யூனியன் கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜ்உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக வீரசக்கதேவி கோவிலில் மாவட்ட கலெக்டர்், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு இன்னிசை கச்சேரி, சிறுவர், சிறுமியர் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
திருவிழாவை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) இரவு இன்னிசை கச்சேரி, வீரபாண்டியன் கட்டபொம்மன் நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை  காலை 6 மணிக்கு சிறிய மற்றும் பெரிய மாட்டுவண்டி போட்டிகள் நடக்கிறது. 

மேலும் செய்திகள்