ஈரோட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
ஈரோட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
ஈரோடு
ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்வரன் என்கிற குட்டசாக்கு (வயது 23). இவர் மீது வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, தாலுகா, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, செல்போன் திருட்டு, வாகன திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் ஒருவருடைய மோட்டார் சைக்கிளை திருடியதற்காக போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த லோகேஷ்வரன் என்கிற குட்டசாக்கு மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, லோகேஷ்வரன் என்கிற குட்டசாக்குவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதற்கான உத்தரவு நகலை போலீசார் கோவையில் உள்ள சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.