ஈரோட்டில் செவிலியர் தின ஊர்வலம்
ஈரோட்டில் செவிலியர் தின ஊர்வலம் நடந்தது.;
ஈரோடு
தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், செவிலியர் தின ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த ஊர்வலத்துக்கு மாவட்ட தலைவர் சசிகலா தலைமை தாங்கினார். செயலாளர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட செவிலியர்கள் ‘உரிமைகளை மீட்போம் புதிய செவிலியம் படைப்போம், செவிலியத்தின் முதலீடு உடல் ஆரோக்கியத்தின் காப்பீடு’ என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச்சென்றனர்.
ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு தொடங்கிய ஊர்வலம் கூடலிங்கம் திடலில் முடிவடைந்தது. இதில், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் விஜயமனோகரன், இணைச்செயலாளர் பெருமாள், பொருளாளர் சுமதி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.