சட்டத்தால் மதமாற்றத்தை தடுக்க முடியாது; குமாரசாமி பேட்டி

சட்டத்தால் மதமாற்றத்தை தடுக்க முடியாது என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-12 21:39 GMT
பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூரு நெலமங்களாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  ஜனதா ஜலதாரே ரத யாத்திரை கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி தொடங்கியது. 15 வாகனங்கள் மாநிலம் முழுவதும் சுற்றி ஆறுகளில் இருந்து நீரை சேகரித்து வந்துள்ளன. இந்த ஜலதாரே ரத நிறைவு மாநாடு நாளை (இன்று) பெங்களூரு நெலமங்களாவில் நடக்கிறது. இதில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள். எங்கள் கட்சி நிர்வாகிகளை இழுக்க பா.ஜனதா காங்கிரஸ் முயற்சி செய்கிறது. இதை பற்றி நான் கவலைப்படவில்லை. மதமாற்றத்திற்கு எதிராக கர்நாடக அரசு அவசர சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது.

 அரசுக்கு ஏன் இந்த அவசரம். மதமாற்றம் ஏன் நடக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். மதமாற்றம் நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும். அம்பேத்கரே புத்த மாதத்திற்கு மாறினார். ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. சட்டத்தால் மத மாற்றத்தை தடுக்க முடியாது.
  இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்