தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பெற மாற்றுத்திறனாளிகள் 25-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெற்று வரும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தொடர்ந்து பெற்றிட ஏதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையினை (யு.டி.ஐ.டி.) பெற விண்ணப்பிக்க வேண்டும். வருகிற 25-ந்தேதிக்குள் தேவையான ஆவணங்களான மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை நகல், முகம் மட்டும் தெரியக்கூடிய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 17-ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையினை பெற்று பயனடையலாம்.