தாளவாடி பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை

தாளவாடி பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

Update: 2022-05-12 21:03 GMT
ஈரோடு
அந்தியூர், பர்கூர், அத்தாணி, ஆப்பக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 8 மணி முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து பகல் 11 மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சாரல் மழை மாலை வரை பெய்து கொண்டே இருந்தது.  அதனால் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பணிகள் மற்றும் செங்கல் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாரல் மழை காரணமாக அந்தியூர் பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது.
இதேபோல் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வருவதும், மாலை நேரத்தில் அவ்வப்போது மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டு வந்தது. மாலை 4 மணி அளவில் மழை தூற தொடங்கியது. அதன்பின்னர் மாலை 6 மணிக்கு பலத்த மழையாக மாறியது. இரவு 8 மணிவரை மழை கொட்டி தீர்த்தது. அதன்பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

மேலும் செய்திகள்