விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடுபவர்களுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 10 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடைய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில்பதிவு செய்து விட்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.