இரவிபுத்தன்துறையில் வலையில் சிக்கிய பாம்பு பிடிபட்டது
இரவிபுத்தன்துறையில் வலையில் சிக்கிய பாம்பு பிடிபட்டது.;
கொல்லங்கோடு,
இரவிபுத்தன்துறையில் வலையில் சிக்கிய பாம்பு பிடிபட்டது.
பாம்பு பிடிபட்டது
நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் ஏ.வி.எம். கால்வாய் கரையோரம் உள்ள வீட்டின் பின்பக்கம் வலை கட்டியிருந்தனர். அதில் நல்லபாம்பு மாட்டி கொண்டதால் வெளியே வர முடியவில்லை. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். இதுபற்றி கொல்லங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பாம்பு பிடிப்பது எங்கள் பணியில்லை என்றும், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் படி கூறினார்கள்.
அதைத்தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் பலமணி நேரம் கடந்து வந்து வலையில் சிக்கிய பாம்பை பிடித்து சென்றனர்.