தொடர்ந்து நெய்வதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நூல் வழங்கி வருகிறார்

தொடர்ந்து நெய்வதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நூல் வழங்கி வருகிறார் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2022-05-12 19:49 GMT
ராஜபாளையம்,
ராஜபாளையம் பகுதி நெசவாளர்கள் சிவகாமிபுரம் கூட்டுறவு சங்கத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் உதவி இயக்குனர் ரகுநாத் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது காடா நூல் வழங்குவதை நிறுத்திவிட்டு வருடத்திற்கு 32 லட்சம் ஜனதா ரக சேலைகள் நெய்வதற்கு நூல்கள் வழங்க வேண்டும். ராட்டை நெய்தல் செய்யும் முதியோர்களுக்கு தமிழக அரசு சார்பாக நிதி உதவி வழங்க வேண்டும்.  நெசவாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
கூட்டத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- பஞ்சு விலைகள் 3 மடங்கு உயர்ந்த போதிலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெசவாளர்களின் நலனுக்காக தொடர்ந்து நெய்வதற்கு நூல் வழங்கி வருகிறார். மேற்கண்ட கோரிக்கைகளை அமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அதனைத் தொடர்ந்து சேலை நெய்வதையும் அவர் பார்வையிட்டார். கூட்டத்தில் நகர பொறுப்பாளர் ராமமூர்த்தி, கைத்தறி ஆய்வாளர் நாகராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் ரோகினிநாகேஷ்வரன், நிர்வாகிகள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்