ஆட்டுக்கொட்டகையில் திடீர் தீ
விருதுநகர் அருகே ஆட்டுக்கொட்டகையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே நந்திரெட்டியபட்டி கிராமத்தில் சோலை என்பவருக்கு சொந்தமான ஆட்டுக் கொட்டகையில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆட்டுக் கொட்டகையில் ஆடுகள் ஏதுமில்லை. இதுபற்றிஆமத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.